Written by Super User Category: எங்களைப்பற்றி
Published Date Hits: 7108
Print

சென்னை வணிக வைசிய கல்யாண மண்டப நிர்வாக சங்கம்சென்னை வாழ் வாணியர்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் கல்யாண மண்டபத்தினை உருவாக்குவதற்காக அன்றைய சமூகப் பெரியோர்கள் 1950 ம் வருடம் மார்ச் மாதம் 12 ம் தேதி சங்கத்தினை துவக்கி 1950 ம் வருடம் மே மாதம் 10 ம் தேதி பதிவு செய்தனர்.

 

அன்றைய காலகட்டத்தில் சங்கத்தினை தோற்றுவித்த பெரியோர்களில் முக்கியமானவர்கள்.

 

திருவாளர்கள்:

 

G.முத்து செட்டியார்

S.பத்மநாப செட்டியார்

C.K.ஏழுமலை செட்டியார்

C.R.தெய்வசிகாமணி செட்டியார்

K.பழனிவேலு செட்டியார்

K.பழனிசாமி செட்டியார்

R.வடமலை செட்டியார்

R.ராஜகோபால் செட்டியார்

V.சிவஞானம் செட்டியார்

 

அதன்பின்பு 2-3-1951 ல் சங்கத்தின் பெயரில் இப்போதுள்ள இடத்தை கிரயத்துக்கு வாங்கி 11-3-1951 ல் திரு சி.எஸ்.ராமசாமி செட்டியார் அவர்களால் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.கட்டட பணிகள் மிகச்செவ்வனே நடைபெற்று 20-04-1952 ல்

 

" சென்னை வணிக வைசிய கல்யாண மண்டபம்"

 

சைவத்திரு .A.சோமசுந்தரம் செட்டியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை நம் கல்யாண மண்டபம் நம் சமூகத்தவருக்கு மட்டுமல்லாமல் பிற சமூகத்தவருக்கும் நல்ல முறையில் பயன்பட்டு வருகிறது.

 

17-05-1975 அன்று நமது சங்கத்தின் வெள்ளிவிழா நிகழ்சிகள் தொடங்கியது.முதல்நாள் நிகழ்ச்சியில் சங்க பெரியோர்களின் திருவுருவ படங்களை திறந்துவைத்து பெருமக்கள் உரையாற்றினர்.

 

இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் சென்னை குமரக்கோட்டம் அருள்மிகு வாணிய சுப்பிரமணிய சுவாமி க்கு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின்னர் வெள்ளிவிழாவினையோட்டி ஏற்பாடு செய்யபட்டிருந்த நம் வாணியர் சமூகப் பெருமக்களின் மாபெரும் ஊர்வலம் திருச்சி .என்.சுப்பிரமணிய செட்டியார் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் )அவர்கள் தலைமையில் 18-05-1975 அன்று அலங்கரிக்கப்பட்ட யானை முன்வர,மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்குடையின் கீழ் சமூகப் பெருமக்கள் திரண்டுவர நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நமது மண்டபத்துக்கு வந்தடைந்த காட்சி அனைவரும் மெச்சத்தக்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

 

இந்தவெள்ளிவிழாவுக்கு ஆந்திர மாநில கடப்பை ஜில்லா செஷன்ஸ் நீதிபதி திரு,ஆர்.எம்.நடேச செட்டியார் தலைமை ஏற்றார்.விழாவில் டாக்டர் பேராசிரியர் சை.வே.சிட்டிபாபு ,சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு என்.கிருஷ்ணசாமி ரெட்டியார்,அமைச்சர் மாண்புமிகு க.ராஜாராம் ,பி.எம் .நாமதேவ் செட்டியார் மற்றும் பெரியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

அதன் பின்னர் ஐம்பதாவது அண்டு பொன் விழாவை முன்னிட்டு தலைவர் திரு. தண்டபாணி செட்டியார் அவர்களாலும் ,சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சமூக மக்களின் ஒத்துழைப்புடன் கல்யாண மண்டபம் புதுப்பிக்கப்பட்டது ."ஐம்பதாவது அண்டு பொன் விழா" டாக்டர் பேராசிரியர் சை.வே.சிட்டிபாபு M.A.B.T.,D.Litt., அவர்கள் தலைமையில் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது .

 

மாண்புமிகு நீதியரசர் என் கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் விழாமலரை வெளியிட தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மாண்புமிகு க.ராஜாராம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

 

அந்த விழாவில் நமது சமூகபெரியோகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


 

Apr 2017 Live!

Apr 2017 Live! 2

ஜாதகப் பதிவு செய்ய...

You are here:   Homeஎங்களைப்பற்றி வரலாறு